ஈரோடு உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

ஈரோடு உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
X

உலக சுற்றுலா தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு, ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் கேடயம் பரிசு வழங்கினார்.

ஈரோட்டில் உலக சுற்றுலா தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஈரோட்டில் உலக சுற்றுலா தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக சுற்றுலா தினவிழா 2024ஐ முன்னிட்டு, சுற்றுலா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மற்றும் அமைதி எனும் தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் இன்று (27ம் தேதி) பரிசுகளை வழங்கினார்.


செப்டம்பர் 27ம் நாளினை உலக சுற்றுலா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து ஆண்டுதோறும் ஒரு கருத்தினை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக சுற்றுலா தின விழா 2024ஐ முன்னிட்டு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டு சுற்றுலா மடிப்பேடுகள் வழங்கப்பட்டது.

மேலும், சுற்றுலா தினத்தினை முன்னிட்டு, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று பரிசுகளை வென்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் க.பழனிச்சாமி, உதவி சுற்றுலா அலுவலர் மு.மணி, மாணவ, மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil