ஈரோட்டில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஈரோட்டில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
X

ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இன்று (10ம் தேதி) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும், சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குறைந்த அளவிலான ஆசிரியர்களே பணிகள் வந்திருந்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil