ஈரோட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முன்னோட்ட கருத்தரங்கம்

ஈரோட்டில்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு முன்னோட்ட கருத்தரங்கம்
X

உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக முன்னோட்ட கருத்தரங்கம் வியாழக்கிழமை ஈரோட்டில் நடைபெற உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக முன்னோட்ட கருத்தரங்கம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோட்டில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

தமிழ்நாடு அரசின் சார்பில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இதன் முன்னோட்டமாக ஈரோடு மாவட்ட தொழில் முனைவோர் கருத்தரங்கினை மாவட்ட தொழில் மையம் நாளை மறுநாள் 23ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடத்துகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024, ஈரோட்டில் பெருந்திரள் கூட்டம் என்ற பெயரில் நடைபெறும் இந்த கருத்தரங்குக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழில் வணிக நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில் தொழில் சார் நிபுணர்கள். வங்கியாளர்கள் பேசுகிறார்கள். எனவே இந்த கருத்தரங்கில் தொழில்முனைவோர், இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கருத்தரங்கை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மணிகண்டன் ஒருங்கிணைத்து நடத்துகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture