அந்தியூர் தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தியில் 160 மனுக்கள் அளிப்பு

அந்தியூர் தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தியில் 160 மனுக்கள் அளிப்பு
X

ஜமாபந்தியில் மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள்.

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 160 மனுக்களை அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் உள்ள அம்மாபேட்டை உள்வட்டத்தில், அம்மாபேட்டை, கன்னப்பள்ளி , இலிப்புலி , சென்னம்பட்டி , கொமராயனூர், புதூர் , மாத்தூர் , வெள்ளித்திருப்பூர் , நெரிஞ்சிப்பேட்டை , ஆரியகவுண்டனூர் ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நடைபெற்றது.‌

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் ஆ.தியாகராஜன் தலைமையில் நடந்த ஜமாபந்தியில், அம்மாபேட்டை தர்காவுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற உள்ள ஜமாபந்தியில் நாளை அந்தியூர் உள் வட்டத்திற்கும் நாளை மறுநாள் பர்கூர் உள்வட்டத்திற்கும் 27ம் தேதி அத்தாணி உள் வட்டத்திற்கும் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.ஜமாபந்தி நிகழ்ச்சியில் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் , துணை தாசில்தார் நல்லசாமி, அந்தியூர் வருவாய் ஆய்வாளர் சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings