ஈரோட்டில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆலோசனை

ஈரோட்டில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆலோசனை
X

சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோட்டில் ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்படும். இந்தநிலையில் விளையாட்டு மைதானத்தில் செயற்கையிழை ஓடு தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.

விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் மைதானம் சீரமைக்கும் பணி, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் உரிய இருக்கைகள் அமைத்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மேடை மற்றும் பந்தல் அமைத்தல், காவல் பாதுகாப்பு பணி, விழாவை காண வரும் மாணவ- மாணவிகள், பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம் அமைத்தல், மைதானத்தை சுற்றி அலங்கரித்தல், பள்ளி-கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!