சென்னிமலை வாய்க்காலில் முழ்கி கர்ப்பிணி பெண் சாவு

சென்னிமலை வாய்க்காலில் முழ்கி கர்ப்பிணி பெண் சாவு
X

பைல் படம்.

பாம்பு குறுக்கே வந்ததால் தடுமாறி ஸ்கூட்டர் வாய்க்காலில் பாய்ந்ததில் கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னிமலை எம்பி நாச்சிமுத்துநகர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சுமித்ரா (வயது 24) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. சுமித்ரா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் மனைவி சுமித்ராவுடன் துணி துவைப்பதற்காக, ஓட்டகுளம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பாம்பு ஒன்று வந்ததுள்ளது.

பாம்பைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த இருவரும் இருசக்கர வாகனத்துடன் வாய்க்காலில் தவறி விழுந்தனர். இதில் சுமித்ரா தண்ணிரில் அடித்துச் செல்லப்பட்டார். பிறகு நேற்று காலை சுமித்ரா சிறிது தூரத்தில் தண்ணீருக்குள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சுமித்ராவின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆர்டிஓ விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!