ஈரோட்டில் கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம்: 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு பாராட்டு

ஈரோட்டில் கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம்: 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு பாராட்டு
X

வீட்டிலேயே பிரசவமான ஆண் குழந்தையுடன் அவசர கால மருத்துவ நுட்புணர் சந்திரன்.

ஈரோட்டில் நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஈரோட்டில் நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஈரோடு வட்டம் மாணிக்கவாசகர் காலனியைச் சேர்ந்தவர் சுதன். இவரின் மனைவி காஞ்சனா மாலிக் (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் இருக்கும் போது இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது, பிரசவ வலி அதிகமானதால், அந்த வீட்டிலேயே ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் சந்திரன் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில், அதிகாலை 3.28 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தாய் மற்றும் சேய் இருவரையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

அவசரம் கருதி பிரசவம் பார்த்த அவசர கால மருத்துவ நுட்புணர் சந்திரன், உதவிய ஓட்டுநர் சிவசங்கர் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் மற்றும் மாணிக்கவாசகர் காலனி பொதுமக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!