சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தை

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தை
X

108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்ததை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பீக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி மகேஷ். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவ வலியால் துடித்தார். அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். அங்கிருந்து அவரை, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

மருத்துவ உதவியாளர் விநாயகமூர்த்தி, டிரைவர் மோகன் ஆகியோர் அவரை அழைத்து சென்றனர். இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் சத்தியமங்கலம் ஈஸ்வரன் கோவில் அருகே வந்தபோது மகேஷ்க்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்து கொண்ட சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

அப்போது மகேஷ்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விநாயகமூர்த்தி மற்றும் வாகன ஓட்டுனர் மோகன் ஆகியோரின் இந்த செயல் அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!