ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.27) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.27) மின்தடை ஏற்படும் பகுதிகள்
X

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.27) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்வாரியம் சார்பில் மின்தடை அறிவிக்கப்படும். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

ERODE DISTRICT POWER SHUTDOWN

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.27) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அளுக்குளி துணை மின் நிலையத்தில் நாளை (செப்டம்பர் 27) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. எனவே, மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் தெரி வித்துள்ளார்.

கோபி அருகேயுள்ள அளுக்குளி துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அளுக்குளி, கோட்டுபுள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடை புதூர், ஒட்டகரட்டு பாளையம், வெங்கமேட்டு புதூர் சத்தி பிரிவு, கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கணபதிபாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூல வாய்க்கால், ராஜீவ்காந்தி நகர் மற்றும் போடிசின்னாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!