ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.24) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.24) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் ஈரோடு, திங்களூர் , சென்னிமலை ஆகிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டம் ஈரோடு, திங்களூர், சென்னிமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஆகையால் இந்த பகுதியில் நாளை (24-ம் தேதி) வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:-

ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டி நான்கு முனை சாலை, எஸ்கேசி சாலை, ஜெகநாதபுரம் காலனி, என்ஜிஜிஓ காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கில் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திகாடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, நாராயணவலசு, டவர் லைன் காலனி,திருமால் நகர், கருங்கல்பாளையம், கேஎன்கே சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரி யார் நகர், ஈவிஎன் சாலை மற்றும் மேட்டூர் சாலை.

திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:-

திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம்மேற்குபகுதி, மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாயக்கனூர்,பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாயக்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில் புதூர், சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு,மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர்.

சென்னிமலை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:-

சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்காநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி சாலை, ஈங்கூர் சாலை, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் எம்பிஎன்நகர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!