சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்
X
சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளர்கள், 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல லட்ச மதிப்புள்ள பெட்ஷீட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை பகுதியில் செயல்படக்கூடிய, அடைப்புதறி விசைத்தறி உரிமையாளர்கள், 20 சதவீதம் கூலி உயர்வு கோரி, இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், இங்கு உற்பத்தி ஆகக்கூடிய பெட்ஷீட்டுக்கள் பல லட்சம் மதிப்பில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

இந்த காலவரையற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, உற்பத்தி ஜவுளி நிறுவன உரிமையாளர்கள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த இதுவரை உறுதி அளிக்கவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அரசு தலையிட வேண்டும் என அடைப்புதறி விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story