ஈரோடு மாவட்டத்தில் நாளை (பிப்.17) மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (பிப்.17) மின்தடை அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் தளவாய்பேட்டை, பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் தளவாய்பேட்டை மற்றும் பூனாச்சி ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது.

மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தளவாய்பேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை)

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:-

பருவாச்சி, துருசாம்பாளையம், இரட்டைகரடு, பெரியவடமலைபாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குபாளையம், கூடல் நகர், சின்னவடமலைபாளையம், செங்கோடம்பாளையம், பாலம்பாளையம்.

பூனாச்சி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை)

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:-

தோப்புத்தோட்டம், கூச்சிக்கல்லூர், செம்படாபாளையம், தர்கா, குறிச்சி, பழனிவேல்புரம், பூனாச்சி, குருவரெட்டியூர், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு