ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் 19ம் தேதி குறைகேட்பு கூட்டம்

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் 19ம் தேதி குறைகேட்பு கூட்டம்
X

ஈரோடு அஞ்சல் தலைமை அலுவலகம்.

ஈரோடு அஞ்சல் கோட்டம் சார்பில் வரும் 19ம் தேதி குறைகேட்பு கூட்டம் அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கின்றது.

ஈரோடு அஞ்சல் கோட்டம் சார்பில் வரும் 19ம் தேதி குறைகேட்பு கூட்டம் நடக்கின்றது. இதுகுறித்து ஈரோடு அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

ஈரோடு அஞ்சல் கோட்டத்தின் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தபால் (அஞ்சல்) அலுவலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.

அஞ்சல் துறை சேவைகள் குறித்து பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்டறியப்படும். இது தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை தபால் மூலம் வருகிற 15ம் தேதிக்குள் அஞ்சல கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 15ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புகார் மனுக்கள் நேரடியாக பெற்று கொள்ளப்படும்.

அந்த மனுவில், புகார் தொடர்பான முழு விபரம், ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். அந்த மனுவின் உறையின் மேற்பகுதியில் 'குறைகேட்பு நாள் மனு' என குறிப்பிட வேண்டும். இவ்வாறு கண்காணிப்பாளர் கருணாகரபாபு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business