ஈரோட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: கலெக்டர் துவக்கி வைப்பு

ஈரோட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: கலெக்டர் துவக்கி வைப்பு
X

கொல்லம்பாளையத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நியாயவிலைக்கடையைச் சேர்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் 7,47,538 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000/- ரொக்கத்துடன் பச்சரிசி, சக்கரை மற்றும் 1 முழுக்கரும்புடன் சேர்த்து ரூ.79.08 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாநகராட்சி, கொல்லம்பாளையம் மற்றும் வண்டிக்காரன் தோட்டம் ஆகிய பகுதிகளில் இன்று ஈரோடு மேயர் நாகரத்தினம் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000/- ரொக்கத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் 1 முழுக்கரும்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

பின்னர், இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுத்தொகுப்பாக ரூ.1000/- ரொக்கத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் 1 முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


தன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7,47,538 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.79.08 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் 1 முழுக்கரும்புடன் ரூ.1000/-ரொக்கம் அடங்கியுள்ளது.

இன்றைய தினம் ஈரோடு மாநகராட்சி, சிந்தாமணி கூட்டுறவு பண்டகசாலையின் நியாயவிலைக்கடையில் கட்டுப்பாட்டிலுள்ள கொல்லம்பாளையம் 1170 குடும்ப அட்டைதாரர்களுக்கு, வண்டிக்காரன்தோட்டம் நியாயவிலைக்கடையில் 745 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 868 முழுநேர நியாய விலைக்கடைகளும், 319 பகுதி நேர நியாய விலைக்கடைகள் மொத்தம் 1187 நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 7,46,097 எண்ணிக்கையில் வேட்டி, சேலைகளும், இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் 1,377 குடும்ப அட்டைதாரர்களுக்கு என மொத்தம் 7,47,474 எண்ணிக்கையில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இவ்விழாக்களில் துணைமேயர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார். இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் (ஈரோடு சிந்தாமணி) ரேணுகா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) சின்னசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான், துணை பதிவாளர்கள் கந்தசாமி (பொது விநியோக திட்டம்), நர்மதா (ஈரோடு சரகம்), கூட்டுறவு சார்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் பாலாஜி ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்ரமணியம், வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், குணசேகரன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!