ஈரோடு மக்களவைத் தொகுதியில் விறு விறுப்பாக தொடங்கியது வாக்குப்பதிவு

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் வரிசையில் நின்ற வாக்காளர்கள்.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோடு தொகுதியில் தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலை நடத்த மத்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16ம் தேதி தேர்தல் தேதியை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவிற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தன. இன்று காலை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்த நிலையில், நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. நேற்று காலையில் இருந்து வாக்கு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக இத்தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தி.மு.க. சார்பில் பிரகாஷ், அ.தி.மு.க. சார்பில் ஆற்றல் அசோக்குமார், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், மற்றும் சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு மக்களவைத் தொகுதி 146 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 1,688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. மேலும், 198 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு துணை ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காலை 7 மணி முதலே முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஏறத்தாழ 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu