அந்தியூரில் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

அந்தியூரில் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X
Erode news- இருசக்கர வாகன திருட்டு நடந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சங்கிலித்தொடர் போல் அடுத்தடுத்த 3 வீடுகளில் புகுந்து திருடிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Erode news, Erode news today- அந்தியூரில் சங்கிலித்தொடர் போல் அடுத்தடுத்த 3 வீடுகளில் புகுந்து திருடிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஸ்வீப்பர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 62). ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது மனைவி விஜயா. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 1-2 மணியளவில் மர்மநபர்கள் இவரது வீட்டினுள் நுழைந்துள்ளனர். பின்னர், வீட்டில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு சென்றுள்ளனர்.

இதேபோல், அருகில் உள்ள 2 வீடுகளில் சங்கிலித்தொடர் போல் மர்மநபர்கள் அடுத்தடுத்து உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில், செங்கோட்டையன் (வயது 44) என்பவரின் வீட்டில் வெள்ளி அரணாவையும், தனபால் (வயது 53) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சென்ற அந்தியூர் போலீசார், திருட்டு நடைபெற்ற வீட்டில் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும், போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். ஒரே இரவில் 3 திருட்டு சம்பவங்கள் நடந்து இருப்பது அந்தியூர் பொதுமக்களிடம் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு