நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X

 பைல் படம்

சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த கங்காபுரம் ஆட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெபதுரை. இவரது மனைவி மங்களவள்ளி (48). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், இன்று காலை 6.15 மணியளவில் மளிகை கடையினை திறக்க நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலியில் இரண்டரை பவுன் தங்க சங்கிலியினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சித்தோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!