சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை

சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குதித்து  வாலிபர் தற்கொலை
X

பைல் படம்.

சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி குமரன் வீதியை சேர்ந்தவர் செந்தில். பனியன் கம்பெனி தொழிலாளி. செந்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று செந்தில் செண்பகபுதூர் அருகே உள்ள வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் , சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!