கோபிசெட்டிபாளையம் அருகே தகராறில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு
பைல் படம்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஆயிகவுண்டனூரை சேர்ந்தவர் ரவி மனைவி மல்லிகா. இவர் சித்தோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார்.இவர் வீட்டில் இருந்த போது அங்கு வந்த ரவியின் நண்பர்கள், ஒத்தகுதிரையை சேர்ந்த சேகர் மற்றும் இளமதி ஆகியோர் குடிபோதையில் மல்லிகாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
இதை மல்லிகாவும், அவரது மாமனார் ராஜூவும் தட்டி கேட்கவே, ஆத்திரமடைந்த சேகரும், இளமதியும், மல்லிகாவையும், அவரது மாமனார் ராஜூவையும் அடித்து உதைத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.இதில் காயமடைந்த 2 பேரும் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu