சித்தோடு: பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

சித்தோடு: பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
X

பைல் படம்.

சித்தோடு அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே கடந்த மாதம் 23-ம் தேதி பெண் ஒருவரிடம் இருந்து மர்ம நபர்கள், பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இது தொடர்பாக, சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று சித்தோடு போலீசார் பெருந்துறை வாவிகடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணவாளன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விஜயன் என்பதும், 2 பேரும் பெண்ணிடம் நகையை பறித்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்