சித்தோடு அருகே புகையிலை விற்றவர் கைது

சித்தோடு அருகே புகையிலை விற்றவர் கைது
X
சித்தோடு பெருமாள்மலை பகுதியில் டீ கடையில் புகையிலை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பெருமாள்மலை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதன்பேரில் சித்தோடு போலீசார் அங்கு சென்று ஒவ்வொரு கடையாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பெருமாள்மலை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள டீ கடையில் மேற்கொண்ட சோதனையில் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதை உறுதி செய்து கடையின் உரிமையாளரான கணபதி நகரை சேர்ந்த குமார் என்கிற கட்டைகுமார் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த குட்கா, புகையிலை என 23 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai and future of education