பிரம்மதேசம் அருகே புதருக்குள் பதுக்கி வைத்து, மது பாட்டில்களை விற்றவர் கைது‌

பிரம்மதேசம் அருகே புதருக்குள் பதுக்கி வைத்து, மது பாட்டில்களை விற்றவர் கைது‌
X

பைல் படம்

பிரம்மதேசம்புதூரில் புதருக்குள் பதுக்கி வைத்து, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்று காலை அந்தியூர் போலீசார் பிரம்மதேசம் புதூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள புதருக்குள் பதுக்கி வைத்து, அரசு மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நகலூர் அருகே உள்ள பெருமாபாளையம் கள்ளுமேடுதோட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, போலீசார் அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!