அந்தியூர் அருகே கவுன்சிலரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

அந்தியூர் அருகே கவுன்சிலரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

கைது செய்யப்பட்ட மாதேவன்.

அந்தியூர் அருகே தாமரைக்கரையில் கவுன்சிலரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் பெஜ்ஜில்பாளையத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி ஜெயக்கொடி, அந்தியூர் ஒன்றிய 1வது வார்டு கவுன்சிலர் உள்ளார். சிவலிங்கமும் அவரது மனைவி கவுன்சிலர் ஜெயக்கொடியும், நேற்று மாலை தாமரைக்கரை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பெஜ்ஜில்பாளையத்தைச் சேர்ந்த புட்டன் மகன் மாதேவன் என்பவர், சிவலிங்கத்திடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மேலும் உன் மனைவி கவுன்சிலராக இருந்து ஊருக்கு என்ன செய்தார் என கூறி, தகாத வார்த்தையால் பேசி, அடித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, இன்று காலை பர்கூர் காவல் நிலையத்தில் சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில், பர்கூர் போலீசார் மாதேவனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாதேவனை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai marketing future