வெள்ளித்திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

வெள்ளித்திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட குஞ்சான்.

வெள்ளித்திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி அருகேயுள்ள கொமராயனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இவரது இருசக்கர வாகனம் காணமால் போனது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளித்திருப்பூர் அருகே சந்தேகப்படும் படியாக சுற்றித் திரிந்த, சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள லக்கம்பட்டியை சேர்ந்தவர் குஞ்சான் என்பவர் சதீஷ்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குஞ்சான் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!