ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
X

க்ரைம் செய்திகள் (பைல் படம்)

ஈரோடு மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

மது விற்ற 15 பேர் கைது :-

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளில் மது விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து ஈரோடு நகரம் மற்றும் கோபி, அந்தியூர், பர்கூர், வெள்ளித்திருப்பூர், அம்மாபேட்டை, பெருந்துறை, அறச்சலூர், கொடுமுடி, புளியம்பட்டி, கடத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

வாலிபர் சாவு:-

ஈரோடு சாஸ்திரி நகர், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (25). இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ஆனந்த் சாப்பிட்டு விட்டு மீண்டும் மது அருந்தியுள்ளார். பின்னர் நள்ளிரவில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். இதனால் மயக்கமடைந்த ஆனந்தை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாட்டரி விற்ற முதியவர் கைது :-

விஜயமங்கலம் அருகே உள்ள மேக்கூர் பகுதியில் கேரள லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போது, மேக்கூர் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள மரத்தினடியில் முதியவர் ஒருவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பூமாணிக்கம் (67) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூ மாணிக்கத்தை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 12 கேரள மாநில லாட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.

வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி:-

பவானி, சலங்களையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). கட்டிட மேஸ்திரி. சம்பவத்தன்று செல்வராஜ் காஞ்சிக்கோவில் பகுதியில் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்வதற்காக கவுந்தப்பாடி ரோட்டில் தனது சைக்கிளில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிக்கோவில் நோக்கி வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து காஞ்சிகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story