அத்தாணி கைகாட்டி பிரிவில் மது பானம் விற்றவர் கைது

அத்தாணி கைகாட்டி பிரிவில் மது பானம் விற்றவர் கைது
X

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது. 

சட்டவிரோதமாக மது விற்ற நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 163 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Police arrested a liquor seller in Athani Kaigattiee Pirivu and confiscated 163 bottles.

அந்தியூர் அருகே அத்தாணி கைகாட்டி பிரிவில் சட்டவிரோதமாக மது விற்ற நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 163 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

காந்தி ஜெயந்தி நாளான நேற்று (திங்கள்கிழமை) ஈரோடு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்தநிலையில், அந்தியூர் அருகே அத்தாணி கைகாட்டி பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள முட்புதரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு, நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த தங்கவேலு மகன் குமரேசன் என்கிற மாரியப்பன் (வயது 32) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 163 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture