அம்மாபேட்டையில் வாகன சோதனையில் சிக்கிய போதை மாத்திரை: கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

அம்மாபேட்டையில் வாகன சோதனையில் சிக்கிய போதை மாத்திரை: கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
X

Erode news- போதை மாத்திரை வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது (மாதிரி படம்)

Erode news- ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வாகன சோதனையில் போதை மாத்திரை வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Erode news, Erode news today- அம்மாபேட்டை வாகன சோதனையில் போதை மாத்திரை வைத்திருந்த கல்லூரி மாணவர்களை 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் எதிரே பவானி மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பவானியில் இருந்து மேட்டூர் நோக்கி இரண்டு பைக்குகளில் சென்ற நான்கு வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர்.


ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனால், போலீசார் அவர்களிடம் சோதனை நடத்திய போது தலா 10 மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டி போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜகோபால் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் நவீன் (21), ஈரோடு எஸ்பிபி காலனி, காடச்சநல்லூரைச் சேர்ந்த செல்வம் மகன் பழனிச்சாமி (19), ஈரோடு, கருங்கல்பாளையம், மணப்பாளையம் ரோடு, கே.எஸ்.நகரை சேர்ந்த பாலு மகன் தமிழரசன் (24), நாமக்கல் மாவட்டம் ஒட்டமெத்தையைச் சேர்ந்த நாகராஜன் மகன் ஸ்ரீதரன் (21) என்பதும், ஈரோடு டவுன் மார்க்கெட்டில் பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த இருவரிடம் ஒரு மாத்திரை ரூ.100 எனவும், ஒரு பெட்டி ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கியதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business