ஈரோடு ஜவுளி கடையில் கூட்டத்தோடு நின்று துணிகளை திருடிய 3 பெண்கள் கைது

ஈரோடு ஜவுளி கடையில் கூட்டத்தோடு நின்று துணிகளை திருடிய 3 பெண்கள் கைது
X

ஈரோடு ஜவுளி கடையில் துணிகளை திருடியதாக கைது செய்யப்பட்ட 3 பெண்கள்.

ஈரோட்டில் துணிக்கடையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று துணிகளை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் துணிக்கடையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று துணிகளை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜவுளி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் உட்பட கடை வீதிகளில் மக்கள் கூட்டம் புத்தாடை வாங்க குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்தை பயன்படுத்தி ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது கடைக்கு ஜவுளி வாங்க வந்த மூன்று பெண்கள் துணிகளை பார்ப்பது போல பார்த்துவிட்டு கடையின் முன்னாள் விற்பனைக்கு அடிக்கு வைத்திருந்த பாவாடை துணி கட்டுகளை எடுத்துச் சென்றனர்.


இதன் பின்னர் கடையின் உரிமையாளர் செல்வராஜ் கடையில் கொள்முதல் செய்யப்பட்ட ஜவுளிக்கு விற்பனையான ஜவுளியுடன் கணக்கிடும் போது ஜவுளி இருப்பது குறைந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த உரிமையாளர் வளாகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை பார்த்த போது கடைக்கு வந்த பெண்கள் ஜவுளி கட்டுக்களை கட்ட பையில் திருடிச் செல்வது தெரியவந்தது.

இதன் பின்னர், ஈரோடு நகர காவல் நிலையத்தில் செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் கோபிசெட்டிபாளையம் கணக்கம்பாளையத்தை சேர்ந்த பவித்ரா, கோகிலா, சுசீலா ஆகிய 3 பெண்கள் என தெரியவந்தது. இதன் பின்னர் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story