அந்தியூர்: 17 வயது சிறுமியை கடத்திய கூடலூர் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

அந்தியூர்: 17 வயது சிறுமியை கடத்திய  கூடலூர் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
X

கைது செய்யப்பட்ட அஸ்வின் ஜார்ஜ்.

அந்தியூர் அருகே 17 வயது பூர்த்தியாகாத சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்தவர் தாஸ் மகன் அஸ்வின் ஜார்ஜ் (22). இவர், கோவை மாவட்டம், காரமடையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் நூற்பாலையில் வேலைக்கு சென்று வந்தார். அதே நூற்பாலையில் அந்தியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார்.

இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அஸ்வின் ஜார்ஜ் அழைத்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து, அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் அஸ்வின் ஜார்ஜை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!