பவானி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

பவானி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
X
பவானி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள ஆர்.என்.புதூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 27). சாயப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குடிப்பழக்கத்தால் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, போதையில் தகராறு ஏற்படவே, நந்தினி கோபித்துக்கொண்டு அருகேயுள்ள மாதேஸ்வரா நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், நேற்று காலை நந்தினி வீட்டுக்கு சென்ற கணேசன், தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். காயமடைந்த அவர் அலறி துடித்தார். உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து விசாரணை செய்து சித்தோடு போலீசார் கணேசனை கைது செய்தனர்.

Tags

Next Story
why is ai important to the future