ஈரோடு காவிரிக்கரையில் பனை விதைகள் நடும் பணி: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ஈரோடு காவிரிக்கரையில் பனை விதைகள் நடும் பணி: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
X

பனை விதைகள் நடும் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஈரோடு காவிரி கரையோரம் பனை விதைகள் நடும் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (2ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு காவிரி கரையோரம் பனை விதைகள் நடும் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (2ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் வரும் 14ம் தேதி காவிரி கரையோர பகுதிகளில் பனைவிதைகள் நடும் பணி துவங்குகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தலைமையில் துவங்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, பனை விதைகள் சேகரிப்பு நடைபெறுகிறது. மேலும், இம்மாதத்தில் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெறவுள்ளது.

மேலும், மாவட்ட நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி தொடர உள்ளது. இதில், பங்கேற்க உள்ள மாணவ, மாணவியர்கள், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, பனைவிதைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil