சத்தியமங்கலம் அருகே குன்றி மலைக் கிராமத்தில் ஆயிரம் பனை விதைகள் நடவு
குன்றி மலைக் கிராமத்தில் பனை விதைகள் நடப்பட்ட போது எடுத்த படம்.
சத்தியமங்கலம் அருகே குன்றி மலைக் கிராமத்தில் அய்யன் திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரி நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் மரம் மக்கள் அறக்கட்டளை இணைந்து ஆயிரம் பனை விதைகளை நட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள குன்றி மலைக் கிராமத்தில், புளியம்பட்டி அய்யன் திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரி நலப்பணி திட்ட மாணவர்கள், மரம் மக்கள் அறக்கட்டளை மற்றும் குன்றி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அய்யன் திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரி நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள், கடம்பூர் வனத்துறை பணியாளர் மற்றும் பொதுமக்கள் இணைந்து குன்றி கிராமத்தில் உள்ள சாலையோர பகுதிகள், குளங்கள், நீரோடைப் பகுதிகளில் ஆயிரம் பனை விதைகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில், அய்யன் திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மணிகண்டன், ஜானகி, மற்றும் மாணவ மாணவிகள், பழங்குடி மக்களின் செயல்பாட்டாளர் சதீஷ், மரம் மக்கள் அறக்கட்டளை சஞ்சீவ் குமார், சேதுபதி, ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பனை மரம் பற்றியும், பனை மரத்தின் நன்மைகள் பற்றியும், கிராம மக்களுக்கு வனத்துறை மற்றும் மரம் மக்கள் அறக்கட்டளை மூலம் விளக்கி கூறப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu