ஈரோட்டில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கு 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு

ஈரோட்டில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கு 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு

Erode news- வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் எடுக்கப்பட்ட படம்.

Erode news- ஈரோட்டில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோட்டில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெறவுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு நாளன்று பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு முதற்கட்டமாக, கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி கடந்த மார்ச் 20ம் தேதி மேற்கொள்ளப்பட்டது .

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் 2024 வாக்குப்பதிவிற்காக அமைக்கப்பட்டுள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் 20 சதவீதம் கூடுதலாக (ரிசர்வ்) சேர்த்து 2,530 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 10,417 நிலை அலுவலர்களுக்கு கணினி மூலம் முதற்கட்ட சுழற்சி முறை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மார்ச் 24ம் தேதி அன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.


தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 1ம் தேதி இரண்டாம் கட்ட கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10,417 அலுவலர்களுக்கு வரும் 7ம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, மண்டல அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில், தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான அறிவுரைகள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள், பாதுகாப்பு அலுவலரின் பணிகள், வாக்குச்சாவடித் தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் (இவிஎம்) கையாளும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், வாக்குப்பதிவிற்கு முன்தினம் செய்யப்பட வேண்டியவை, வாக்குச்சாவடிக்கு வெளியே மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள், வாக்குப்பதிவு முகவர்களுக்கான குறிப்புகள், வாக்குச்சாவடி அமைக்கப்படும் முறை, வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டியவை, ஒத்திகை வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு தொடங்கியவுடன் செய்ய வேண்டியவை, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொதுவாக நிகழக்கூடிய குறைபாடுகளும் அவற்றை சரிசெய்யும் முறைகள் உள்ளிட்டவை குறித்து மண்டல அலுவலர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இப்பயிற்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜ் (வளர்ச்சி), ரமேஷ் (சத்துணவு), உதவி திட்ட அலுவலர் (வளர்ச்சி) மகேஸ்வரி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story