தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு ஆட்சியரிடம் மனு அளித்தார்.

HIGHLIGHTS

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்  ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். அவரது மனைவி அனுபல்லவி. இவர்களுக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

அனுபல்லவி இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்குட் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதியன்று தாளவாடி அரசு மருத்துவமனையில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்கிற முகாம் அரசு மருத்துவர்களால் நடத்தப்பட்டது.

என்னுடன் சேர்த்து எட்டு பேர் அன்று குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தோம். அன்று மதிய நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சுய நினைவின்றி இருந்தேன். பின்னர் சுயநினைவு திரும்பி வந்தபோது கோவை தனியார் மருத்துவமனை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 25 நாள் தீவிர சிகிச்சை பிரிவு இருந்துள்ளதாகவும், பிறகுதான் அங்கிருந்து மருத்துவர்கள் எனக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதற்கு பதிலாக என்னுடைய இருதயத்துக்கு ரத்தம் செல்லும் குழாயை துண்டித்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் எனக்கு அடிக்கடி ஜன்னி, மயக்கம் தொடர்ந்து வருவதுடன், இருதய நோய் பிரச்சனை ஏற்பட்டு தற்போது மருத்துவர்கள் எனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம் என்று கூறியுள்ளனர். இதனால் தினமும் உடல் உறுப்புகளை சிதைத்து தினமும் உடல் உபாதைகளுடன் போராடிக் கொண்டு வருகிறேன்.

எனவே, தவறான அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Updated On: 12 Feb 2024 3:41 PM GMT

Related News