சிகிச்சை முடிந்து வீடு திரும்ப முடியாமல் பெயிண்டர் தவிப்பு: ஈரோடு ஆட்சியரிடம் விசிகவினர் மனு
Erode news- ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உறவினர்கள்.
Erode news, Erode news today- ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்தும் பெயிண்டரை வீட்டிற்கு அழைத்து செல்ல முடியாமல் குடும்பத்தினர் தவித்து வருவதாக, நடவடிக்கை எடுக்கும்படி ஈரோடு ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு, திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் ஈரோடு கரட்டுப்பாளையத்தை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது தம்பி தமிழரசன் (வயது 29). தாயார் சம்பூரணத்துடன் ஈரோடு தயிர்பாளையத்தில் வசித்து வருகிறார். தமிழரசன் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று ஈரோடு லக்காபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். அந்த வீட்டில் உள்ள சன்சைடு கம்பியை பிடித்து பெயிண்ட் அடிக்கும் போது கம்பி உடைந்து நிலைதடுமாறி தமிழரசன் கீழே விழுந்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன்பிறகு வீட்டின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற செய்யுங்கள் என்று கூறினார். இதனால் தமிழரசன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவருக்கு முகத்தில் பத்து இடத்தில் பிளேட் வைத்து சிகிச்சை செய்யப்பட்டது.
மேலும் கை, கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான செலவு ரூ 4.86 லட்சம் ஆகியுள்ளது, ஆனால், வீட்டின் உரிமையாளர் தமிழரசன் சிகிச்சைக்கான செலவை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியாமல் என் தம்பியை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் எங்கள் குடும்பம் உள்ளது. எனவே ஆட்சியர் இதை கவனத்தில் எடுத்து எங்களுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu