ஈரோட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் தொடக்கம்
ஈரோட்டில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோட்டில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் முத்துசாமி சனிக்கிழமை (நேற்று) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு திமுக சார்பில், பல கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை அஞ்சல் அட்டையில் முதல் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரிய கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் ஈரோடு பூந்துறை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரும் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். தமிழ் ஆராய்ச்சி மாணவர் தமிழ் காமராசன் பங்கேற்று நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
இந்த கையெழுத்து இயக்கத்தில், திமுக உயர் மட்ட குழு உறுப்பினர் கந்தசாமி, நெசவாளர்கள் அணி செயலாளர் சச்சிதானந்தம், திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரக்குமார், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரகாஷ். மாணவரணி மாநில துணை செயலாளர் வீரமணி, மாவட்ட நிர்வாகிகள் குமார் முருகேஷ், செந்தில்குமார், செல்லப் பொன்னி, சின்னையன். பழனிசாமி, திண்டல் குமாரசாமி, மாநகராட்சி மேயர் நாகரத்தனம், மாநகர செயலாளர் சுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், அக்னி சந்துரு என்ற சந்திரசேகர், இலக்கிய அணி அமைப்பாளர் இளைய கோபால், துணை மேயர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், கே.பி.சாமி உட்பட பலர் கலந்து கொண்டு, அஞ்சல் அட்டையில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கையெழுத்திட்டு, அதனை அங்கு வைத்திருந்த பெட்டியில் பதிவு செய்தனர்.
இந்த கையெழுத்து இயக்கத்தில் 50 நாட்கள் நடைபெறும் என்றும், இவை அனைத்தும் தலைமை மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த கையெழுத்து இயக்கத்திற்கான ஏற்பாடுகளை திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஜெ.திருவாசகம், மாநகர துணை அமைப்பாளர் பெ.சீனிவாசன், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் ராசு என்ற கோபால், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் விவேக் ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu