அறச்சலூர் அருகே மர்ம விலங்கை பிடிக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

அறச்சலூர் அருகே மர்ம விலங்கை பிடிக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
X

மர்ம விலங்கை பிடிக்க கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அறச்சலூர் அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மொடக்குறிச்சி அடுத்த அறச்சலூர் அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகே உள்ள அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஈரோடு வனசரகத்திற்கு உட்பட்ட நாகமலை வனப்பகுதியில் இருந்து கடந்த 14ம் தேதி வெளியேறிய மர்ம விலங்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் இருந்த பசு மாட்டை வேட்டையாடி இழுத்துச் சென்றது.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு வனத்துறையினர் ஆய்வு நடத்தியதில் சேகரித்த தடயங்கள் அடிப்படையில் 99 சதவீதம் வேட்டையாடியது சிறுத்தை என உறுதி செய்து கடந்த 7 நாட்களாக இரவு நேர ரோந்து பணி மற்றும் 3 இடங்களில் கூண்டு வைத்தும் 8 இடங்களில் விலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா வைத்து கிராமங்களின் கால்நடைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிராம மக்களை அச்சுறுத்தி வரும் மர்ம விலங்கை விரைந்து பிடிக்க கோரி நாகமலை சுற்றியுள்ள வெள்ளிவலசு, வேமாண்டாம்பாளையம், ஓம் சக்தி நகர், சங்கரன் காடு ஆகிய கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

நாகமலை சுற்றியும் விவசாய தோட்டங்கள் அதிக அளவில் இருப்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும் பெண்கள் அச்சத்தில் இருப்பதாகவும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் வனத்துறையினர் பணிகளை துரிதப்படுத்தி கூடுதல் இடங்களில் கூண்டு மற்றும் கேமரா வைத்து கண்காணித்து மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கால்நடைகளை இழந்த விவசாயிக்கு இழப்பீடாக 20ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil