செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயம்

செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயம்
X

பைல் படம்.

பெருந்துறையில் செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை திலகர் தெருவை சேர்ந்தவர் பூங்கொடி. சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், தாரணி என்கிற பூஜா (வயது 15) என்ற மகளும் உள்ளனர். தாரணி பெருந்துறை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தாரணி வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் செல்போனில் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பூங்கொடி மகள் தாரணியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பூங்கொடி வேலைக்கு சென்று விட்டார். 10 மணிக்கு தாரணி தனது தாய் பூங்கொடிக்கு போன் செய்து தான் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் தாரணி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பூங்கொடி மகளை மீட்டுத்தருமாறு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!