/* */

பெருந்துறை, சித்தோடு பகுதிகளில் தொடர் திருட்டு: போலீஸ் உள்பட 4 பேர் கைது

திருட்டு கும்பலுக்கு போலீஸ் ஒருவர் மூளையாக இருந்து செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

பெருந்துறை, சித்தோடு பகுதிகளில்  தொடர் திருட்டு:  போலீஸ் உள்பட 4 பேர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பெருந்துறை பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் மதுரை மாவட்டம் திசையன்விளை மாததேவன்குலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற செந்தில்குமார்(30) என்பவரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பெருந்துறை பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து செல்வதாக பெருந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் மசுதாபேகம் மற்றும் போலீசார் மளிகை கடைக்கு சென்று ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மளிகை கடை ஈரோடு ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் ராஜீவ்காந்திக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதனை எடுத்து போலீசார் காவலர் ராஜீவ் காந்தி பற்றி ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

திருட்டு வழக்கில் கைதான செந்தில்குமாரை வழக்கு தொடர்பாக கோவை சிறையில் இருந்து பெருந்துறை நீதிமன்றத்திற்கு வெளியில் பெருந்துறை போலீசார் அழைத்து வந்தனர். அந்த விசாரணை அதிகாரிகளில் ராஜீவ் காந்தியும் ஒருவராக இருந்துள்ளார். அப்போது ராஜீவ் காந்தி பெருந்துறையில் உள்ள குற்றப்பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். ராஜீவ் காந்திக்கும் , செந்தில்குமார் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜீவ் காந்தி போலீஸ் இடம் சிக்காமல் திருடுவது எப்படி? என்று நான் சொல்லித் தருகிறேன். சிறை தண்டனை முடிந்ததும் என்னை வந்து பார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறை தண்டனை முடிந்து செந்தில்குமார் வெளியே வந்தார். அப்போது ராஜீவ்காந்தி ஈரோடு ஆயுதப்படை பிரிவில் மாற்றப்பட்டு காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் செந்தில்குமார் வெளியே வந்து ராஜீவ்காந்தியை சந்தித்தார். அப்போது ராஜீவ் காந்தி பெருந்துறையில் தனக்கும் மளிகை கடை இருப்பதாகவும் அங்கு தங்கியிருந்து திருட்டில் ஈடுபடலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். அப்போது செந்தில் குமார் உடன் மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி பாலசுப்பிரமணியம் மேலும் இரண்டு பேரும் ஒரு குழுவாக இணைந்தனர்.

இதனை அடுத்து காவலர் ராஜீவ் காந்தி எந்தப் பகுதியில் திருட வேண்டும் எந்த பகுதியில் சிசிடிவி கேமரா இருக்காது? எந்த பகுதியில் போலீஸ் வந்து இருக்காது? என்று ஐடியா கொடுத்து செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் பல்வேறு இடங்களில் திருடுவதற்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளார். இதன்படி சித்தோட்டில் ஒரு வீட்டிலும் பெருந்துறை உள்ள ஒரு வீட்டிலும் பெருமாநல்லூரில் ஒரு வீட்டிலும் உட்பட பல்வேறு இடங்களில் செந்தில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து பெருந்துறையில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற பாலசுப்பிரமணி (42), மதுரை மேலூர் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்த கருப்புசாமி (31), திருட்டுக்கு மூளையாக செயல்பட்ட காவலர் ராஜீவ் காந்தி ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சித்தோட்டில் நடத்த கொள்ளையில் தொடர்புடைய கார்த்திக் என்கிற செந்தில்குமாரை(30) சித்தோடு போலீசார் கைது செய்தனர். இப்படிப்பட்டவர்களிடமிருந்து 6 பவுன் நகைகள், இரண்டு பட்டா கத்தி, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் இதுவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட காவலர் ராஜீவ் காந்தி 2009 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை திருப்பூரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை குற்றப்பிரிவில் முதல் நிலை காவலராகவும் அதன் பின்னர் தற்போது ஆயுதப்படையில் காவலராகவும் பணி புரிந்து வந்தார்.கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட கிளை அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு வழக்கில் போலீசார் ஒருவர் மூளையாக இருந்து செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 19 March 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...