அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன்
கொடுமணல் கிராமத்தில் இறுதிக்கட்ட அகழ்வாராய்ச்சி பணியை ஆய்வு செய்யும் அமைச்சர் சாமிநாதன்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் இறுதிக்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தொழிற்கூடங்கள் இருந்த பகுதி, பழங்கால மக்கள் வாழ்ந்த பகுதி மற்றும் கல்லறைகள் இருந்த பகுதிகளில் இதுவரை கிடைத்த பழங்கால பொருட்கள் மற்றும் ஆய்வு முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், தொல்லியல் துறையின் மூலம் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் பண்டைய கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொடுமணல், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கிடைக்கபெற்ற ஆதாரங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டதில் 3200 ஆண்டுகள் பழமையானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி பணிகள் விரிவுபடுத்தப்பட்டு அதற்கு தேவையான நிதிகள் ஒதுக்கப்படும். இதுவரை கிடைக்கப்பெற்ற பண்டைய கால பொருட்களை மக்கள் பார்ப்பதற்கு வசதியாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காட்சியாக வைக்கப்படும் எனக் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu