சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி

சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி
X

பைல் படம்.

பெருந்துறை அருகே புதிய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் சென்னிமலையைச் சோ்ந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை பிடாரியூா் காலனியைச் சோ்ந்தவா் நல்லப்பன் மகன் மணி. கட்டட கூலி தொழிலாளி. பெருந்துறை, ஈரோடு சாலையில் உள்ள மருத நகரில், முகமது முத்து என்பவா் புதிதாகக் கட்டி வரும் கட்டடத்தில், மணி டிரில்லிங் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, மாடிக்குச் செல்லும் படிக்கட்டின் பக்கவாட்டுச் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த மணியை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், மணி இறந்து விட்டதாகக் கூறினாா். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!