பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் சாமிநாதன் வழங்கல்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஞ்சை பாலதொழுவு, புதுப்பாளையம் ஊராட்சி உட்பட்ட பகுதியில் 80.57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மற்றும் சாக்கடை வசதி அமைப்பதற்கான பணியினை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னிமலை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அறுவை சிகிச்சை படுக்கையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர், நாமக்கல் பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சாமிநாதன், 19 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்,ஆதரவற்றோர்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி கோரிக்கை மனுக்க கொடுத்துள்ளனர் . மனுக்களை மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உரிய விசாரணைக்குப்பின் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக முதல்வர் உங்கள் தொகுதியில் முதல்வர் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுள்ளார். மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆங்கயங்கே நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu