முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: பெருந்துறையில் அதிமுகவினர் மௌன ஊர்வலம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: பெருந்துறையில் அதிமுகவினர் மௌன ஊர்வலம்
X
பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பல இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் பெருந்துறையில் அதிமுகவினர் மௌன ஊர்வலம் சென்று ஜெ. படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7வது நினைவு நாளை முன்னிட்டு பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பல இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெ.திருவுருவ படத்திற்கு எம்எல்ஏ- ஜெயக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் போலீஸ் ரவுண்டானா, பழைய பஸ் நிலையம் வழியாக குன்னத்தூர் நால் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு அண்ணா சிலை வழியாக மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு மெளன ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ், மேற்கு ஒன்றியசெயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் ஆகியோர் தலைமையில் காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, திங்களூர், போலநாயக்கன்பாளையம்,உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில், பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ் உள்ளிட்டோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!