மதுபோதையில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு

மதுபோதையில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு
X

பைல் படம்.

சித்தோடு அருகே திருமணமாகாத விரக்தியில் மது போதையில் மயங்கி விழுந்த நபர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு, சித்தோடு அருகேயுள்ள நடுப்பாளையம், சந்திரா டெக்ஸ் வீதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சரவணன் (வயது 47). வாடகைக் கார் டிரைவரான, இவரது உடன்பிறந்தோருக்கு திருமணமாகி விட்டது. இதனால், சகோதரி பேபியின் வீட்டில் சரவணன் தங்கியிருந்தார். இவரது திருமணத்துக்கு சரியான பெண் அமையாததால் விரக்தியில் அளவுக்கதிகமாக மது குடித்துவிட்டு, குடிபோதையில் இருப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அளவுக்கதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர், இனிமேல் தனக்கு திருமணம் ஆகபோவதில்லை என விரக்தியாக பேசிவிட்டு, இரவு தூங்கச் சென்றவர் படுக்கையில் மயங்கிக் கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் சரவணனை மீட்டு, நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!