பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா

Erode news- கொங்கு பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் சிறந்த மாணவர்களுக்கு தங்க நாணயம், ரொக்கம் வழங்கப்பட்டது.
Erode news, Erode news today- பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா நடந்தது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா கல்லூரியின் கொங்கு பல்கலை மையத்தில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஏபிபி பிராசஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் உலகளாவிய டிஜிட்டல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான ராஜேஷ் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர், அவர் பேசுகையில், உலக அளவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் அதற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்வது குறித்தும் விவரித்து பேசினார்.மேலும் அவர் கல்லூரியின் உள் கட்டமைப்பு, இங்கு உள்ள கற்றல், பயிற்றுவித்தல் நடைமுறைகள் குறித்தும் பாராட்டி பேசினார். விழாவில், இந்திய ராணுவத்தின் இஎம்இ படைப்பிரிவு கர்னல் விஸ்வநாதன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரியின் முதல்வர் பாலுசாமி 2023-24 கல்வி ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்தார். இக்கல்லூரியில் இறுதியாண்டு முடித்து வெளியேறும் மாணவர்களில் சிறந்தவர் மற்றும் மாணவிகளில் சிறந்தவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்லூரி சார்பாக தலா ஒரு சவரன் தங்க நாணயமும், ரொக்கமும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், விளையாட்டில் சிறந்த மாணவ மாணவியருக்கும், சிறந்த கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்த மாணவருக்கும் மற்றும் துறை வாரியாக சிறந்த ஆசிரியர்களுக்கும், சிறந்த கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் மற்றும் தங்க நாணயத்துடன் ரொக்கமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இவ்விழா கல்லூரியின் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. விழாவில், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை தலைவர் மருத்துவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், கல்லூரி தாளாளர் இளங்கோ மற்றும் அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலர்கள், கல்லூரியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu