/* */

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை மக்கள்-எம்பி சந்திப்பு கூட்டம்: ஜெயக்குமார் எம்எல்ஏ

Erode news- திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை மக்கள், எம்பி சந்திப்பு கூட்டம் நடத்தப்படும் என்று பெருந்துறையில் ஜெயக்குமார் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை மக்கள்-எம்பி சந்திப்பு கூட்டம்: ஜெயக்குமார் எம்எல்ஏ
X

Erode news- பெருந்துறையில் திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஜெயக்குமார் எம்எல்ஏ.

Erode news, Erode news today- திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை மக்கள், எம்பி சந்திப்பு கூட்டம் நடத்தப்படும் என்று பெருந்துறையில் ஜெயக்குமார் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னிய வலசு பகுதியில் தொடங்கிய இந்த தேர்தல் பிரச்சாரம் பெருந்துறை பழைய பஸ் நிலையம், கோட்டைமேடு காலனி, மேக்கூர் காமாட்சி அம்மன் கோவில், சுள்ளி பாளையம் பள்ளக்காட்டூர், திருப்பதி, பழைய சீனாபுரம், பட்டக்காரன் பாளையம் காலனி, ஆயி கவுண்டம்பாளையம், குறிஞ்சி நகர், குள்ளம்பாளையம் பவர் ஹவுஸ், மேட்டுப்புதூர் கின்னிபாளையம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வரை மேற்கொள்ளப்பட்டது.

இப்பிரச்சாரத்தின் போது பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பேசியதாவது, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை வெற்றி பெறச் செய்தால் எம்எல்ஏவான நானும், எம்பியும் இணைந்து மக்கள் நலத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி தருவோம். கொரோனா காலத்தில் நாங்கள் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகளை வீடு தேடி வந்து கொடுத்துச் சென்றோம்.

இந்த தொகுதியின் எம்பியாக இருக்கும் சுப்பராயன் கடந்த 5 ஆண்டுகளில் என்றாவது ஒரு நாளாவது மக்களை சந்திக்க வந்திருக்கிறாரா? ஏற்கனவே என்னை நீங்கள் 3 முறை யூனியன் கவுன்சிலராக தேர்ந்தெடுத்து இருந்தீர்கள். இப்பொழுது எம்எல்ஏவாக தேர்வு செய்திருக்கிறீர்கள். என்னை இப்பகுதி மக்கள் வாரத்துக்கு மூன்று நாட்களாவது சந்திக்கிறீர்கள்.

இதேபோல அருணாச்சலமும் இந்த மண்ணின் மைந்தர் என்பதால் அவர் எம்பியானால் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். மாதந்தோறும் எம்பியும் மக்களும் சந்திக்கும் ஒரு சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் மக்கள் குறைகள் கேட்டு அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்து தருவோம். பெருந்துறை சட்டமன்றத் தொகுதி எப்போதும் அதிமுகவின் எக்கு கோட்டை என்று பலமுறை நிரூபித்து விட்டோம். இந்த முறையும் அதிமுகவுக்கு வாக்களித்து அதை நிரூபிக்க வேண்டும் என ஜெயக்குமார் எம்எல்ஏ வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தில், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய குழு தலைவி சாந்தி ஜெயராஜ், முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் தலைவர் டி.டி.ஜெகதீஷ், மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ்.மணி, மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் பிரபு, எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் திருமூர்த்தி, பெருந்துறை ஒன்றிய அண்ணா திமுக அவைத்தலைவர் மேட்டுப்பாளையம் பாலு, துணைத்தலைவர் இளங்கோ, பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் ரொட்டி மணி மற்றும் அண்ணா திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 April 2024 11:00 AM GMT

Related News

Latest News

 1. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 2. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 4. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 5. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
 6. இந்தியா
  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
 7. லைஃப்ஸ்டைல்
  தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
 8. லைஃப்ஸ்டைல்
  உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
 9. லைஃப்ஸ்டைல்
  "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
 10. இந்தியா
  கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ