பவானிசாகர் அருகே சாலையில் உலா வந்த கரடியால் மக்கள் பீதி

பவானிசாகர் அருகே சாலையில் உலா வந்த கரடியால் மக்கள் பீதி
X

பவானிசாகர் வெள்ளாளபாளையம் பகுதியில் சாலையில் உலா வந்த கரடியை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த ஒற்றை கரடியால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பவானிசாகர் அருகே இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த ஒற்றை கரடியால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தை ஒட்டி உள்ள கிராமங்களில் இரவு நேரத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை ஆகிய வனவிலங்குகள் புகுந்து நடமாடுவதும், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் உள்ள சாலையில் உலா வந்தது. சிறிது நேரம் சாலையில் நடமாடிய கரடி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. கரடி சாலையில் நடமாடிய காட்சி அப்பகுதியில் - பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அப்பகுதி பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது. மேலும், இரவு நேரங்களில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு விளாமுண்டி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!