பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Erode news- பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா.
Erode news, Erode news today- பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சிகள் வரும் மார்ச் 25 (திங்கட்கிழமை) மற்றும் 26ம் (செவ்வாய்க்கிழமை) தேதிகளிலும், மறுபூஜை விழா ஏப்ரல் 1ம் தேதியும் (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்நிலையில், விழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் ஏப்ரல் 1ம் தேதி மறுபூஜை விழாவினை முன்னிட்டு கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கவுந்தப்பாடி, சத்தி, பவானி, புளியம்பட்டி, மைசூர், நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu