கோபி பச்சமலையில் பங்குனி உத்தர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பச்சமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோபி அருகே பச்சமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஈரோடு மாவட்டம் கோபி பச்சமலையில் பங்குனி உத்தர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. துவக்க விழாவையொட்டி யாக பூஜைகளும், பூத வாகனத்தில் சாமி திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) மாலை ஜனனி வாகனத்தில் திருவீதி உலாவும், 21ம் தேதி மாலை ரிஷப வாகன காட்சியும், 23ம் தேதி மாலை ஆட்டுக்கடாய் வாகன காட்சியும், 24ம் தேதி காலை யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து சண்முகவருக்கு சிகப்புச்சாற்றுதல் உற்சவம், காலை 10 மணிக்கு கல்யாண சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை நான்கு மணிக்கு மயில் வாகனத்தில் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு சாமி திருப்பி எழுந்திருத்தல் நிகழ்ச்சியும், சங்கருக்கு வெள்ளை சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக 25ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், திருப்படி பூஜை விழாவும், அதைத் தொடர்ந்து சண்முகருக்கு பச்சை சாற்றுதல் நிகழ்ச்சி, காவடி, பால்குடங்கள், அபிஷேகங்கள் ஆகியவையும் மாலை நான்கு மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடைபெறுகிறது.
தொடர்ந்து, 26ம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மலர் நகர்வலம் வருதல் உடன் பங்குனி உத்தர திருவிழா நிறைவு பெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu