அதிமுக 53வது ஆண்டு விழா: கோபியில் எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ் அணியினர் மரியாதை..!

அதிமுக 53வது ஆண்டு விழா: கோபியில் எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ் அணியினர் மரியாதை..!
X

கோபியில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு ஓபிஎஸ்  அணியினர் மலர் தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

அதிமுக 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Erode News live, Erode Today News, Erode Live Updates - அதிமுக 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோபியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் எம்ஜியாரால் துவங்கப்பட்ட அதிமுக கட்சியின் 53வது ஆண்டு விழாவை, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் மாரப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புளியம்பட்டி நகர செயலாளர் சச்சின், சத்தி ஒன்றிய செயலாளர் ரமேஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் எம்ஜியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
photoshop ai tool